ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை 1–2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. தொடரின் முதலாவது டி20 போட்டி இன்று கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினர். அபிஷேக் சர்மா 19 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இந்தியா 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்தது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது மற்றும் போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பின்னர் இந்தியா 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 97 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போது கில் 37 ரன்னுடனும், சூர்யகுமார் 39 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி20 போட்டி வரும் 31ம் தேதி மெல்போர்னில் நடைபெறும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ChatGPT can make mistak