 
             
 
பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களில் தக்காளி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.700 வரை விற்பனையாகிறது. இதுவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை இது ரூ.100 மட்டுமே இருந்தது. இந்த விலை உயர்வு சாதாரண மக்களின் உணவுப் பொருள் செலவைக் கடுமையாக பாதிக்கிறது.

வெள்ளம் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் நடக்கும் வர்த்தகத் தடைகள் இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பயிர்களை அழித்ததால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக பாதிப்புகள், எல்லைப் பதட்டங்கள் மற்றும் ஏற்றுமதிக்கு தடைகள் மூலம் தக்காளி விலை ஏறிவருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் ஜீலம் மற்றும் குஜ்ரன்வாலாவில் தக்காளி விலை அதிகரித்து, கிலோவுக்கு ₹700க்கு விற்பனை செய்யப்படுகிறது. பைசலாபாத், முல்தான் மற்றும் லாகூரில் விலை ₹500, ₹450 மற்றும் ₹400 ஆக உயர்ந்துள்ளது. இது அரசின் நிர்ணய விலை ₹175 ஐ மிஞ்சியுள்ளது. வெள்ளம் மற்றும் விநியோக பற்றாக்குறை சந்தையில் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!