உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சியில் ஆசைக்கு இணங்காத மனைவியை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ராணிப்பூர் பகுதியைச் சேர்ந்த தீஜா (26) என்பவர், 2022ல் முகேஷ் அஹிர்வாரை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்தின் தொடக்கத்தில் தம்பதியினர் சமாதானமாக வாழ்ந்தாலும், சில மாதங்கள் கழித்து முகேஷின் நடத்தை மாறியது.
அவர் அடிக்கடி வீட்டில் தங்காமல் வெளியே சென்று, திரும்பி வந்தபோது தீஜாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் வீட்டுக்கு வந்த முகேஷ், தீஜாவை தாக்கி கட்டாயமாக தாம்பத்யம் கொண்டதாக தகவல்.
அதன்பின், மறுநாள் மீண்டும் தாம்பத்யம் கொள்ள முயன்றபோது தீஜா மறுத்ததால், கோபமடைந்த முகேஷ் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், தீஜாவை வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசியுள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே வந்து தீஜாவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து தீஜா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் முகேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.