 
             
 
 
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ, ‘நல்லது செய்யலாமா? வேண்டாமா?’ என்ற தார்மீக விவாதத்தை எழுப்பியுள்ளது. அதிவேகமாக வந்த கார் மோதவிருந்தபோது, கவனக்குறைவாக நடந்து சென்ற ஒரு பெண்ணை, பெயர் தெரியாத ஓர் ஆண் துணிச்சலுடன் பிடித்து இழுத்துச் சென்று காப்பாற்றினார். பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில், அந்த ஆண் கிட்டத்தட்ட கட்டியணைப்பது போல் இழுத்து, சமநிலை தவறி இருவரும் தரையில் உருளும் காட்சியும் பதிவாகியுள்ளது. ஆனால், அதிர்ச்சி என்னவென்றால், காப்பாற்றப்பட்ட அந்தப் பெண், தன்னை அவசியமற்ற முறையில் “தொடுதல் மற்றும் தவறாக நெருங்கினதாக” அந்த அந்நியர் மீது புகார் அளித்ததாக ஒரு செய்தி வெளியானது.
இந்தச் சம்பவம் குறித்த சரியான இருப்பிடம் மற்றும் உண்மைத் தன்மையை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், சமூக வலைத்தளங்களில் இது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. “இனி யாரையும் காப்பாற்றினால் குற்றவாளி ஆகிவிடுவோம் போல!”, “அடுத்த முறை யாரையும் காப்பாற்றாமல் விட்டுவிடவேண்டுமா?” போன்ற கேள்விகளுடன் பயனர்கள் தங்கள் கலக்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by RCIC – Immigration – Lawyer – Notary – Visa (@goldenpathwayimmigration)