 
             
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில், குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குரூப்–4 தேர்வுக்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கான பட்டியல் ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது,” என கூறப்பட்டுள்ளது.
மேலும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை நவம்பர் 7க்குள் தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரத்துக்குள் பதிவேற்றம் செய்யாதவர்கள் தெரிவின் அடுத்த கட்டத்திற்குப் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!