 
             
 
 
பொதுவாக அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்களில் போதுமான வசதிகள் இருக்காது, பல பொருட்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருக்கும் என்ற எண்ணமே மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால், மக்களாகிய நாம் நமது குறைகளை அரசிடம் தெரிவிக்காதவரை, அந்தக் குறைகள் அப்படியேதான் இருக்கும். எப்போது நமது குறைகளைத் தெரிவிக்கிறோமோ, அப்போதுதான் நமக்கான தீர்வு கிடைக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்த ஒரு பயணி, தான் அமர்ந்திருந்த இருக்கையில் உள்ள சார்ஜிங் போர்ட் வேலை செய்யவில்லை என்று ரயில்வே துறை அதிகாரிகளிடம் முறையாகப் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் அளிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, ரயில்வே நிர்வாகம் உடனடியாகச் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை அனுப்பி, அந்தச் சார்ஜிங் போர்ட்டை உடனுக்குடன் சரி செய்து கொடுத்தார் நம்மைச் சுற்றியுள்ள பொது மற்றும் அரசுச் சொத்துக்களைப் பாதுகாப்பதில் நமக்கும் கடமை உண்டு என்பதையும், எங்கெங்கெல்லாம் குறைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் உடனடியாகப் புகார் அளித்து அதை நிவர்த்தி செய்ய வைக்கும் கடமை நமக்கும் இருக்கிறது என்பதையும் இந்தச் சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.
View this post on Instagram
A post shared by Sanatan Dharma (@_akhand_bharat_official_)