 
            திருமண விழாக்களில் பாரம்பரியத்துடன் சேர்த்து புதுமை கலக்குவது சமீபகாலத்தில் பெரும் பரவலாகி வருகிறது. அழைப்பிதழ் முதல் ஆடை வரை,எல்லாவற்றிலும் டெக்னாலஜியின் தடம் தெளிவாக தெரிகிறது.
இதற்கு ஓர் சான்று போல, கேரளாவில் நடைபெற்ற ஓர் திருமண விழா தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.அந்த திருமணத்தில் நடந்த மொய் விருந்து (gift collection) முறையே விருந்தினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பாரம்பரியமாக கையில் பணம் கொடுப்பதற்கு பதிலாக, மணமகன் உறவினரொருவர் தன்னுடைய சட்டைப்பையில் கியூஆர் கோடு பொறிக்கப்பட்ட அட்டையை ஒட்டியிருந்தார்.
மேலும், திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, தங்களது மொய்ப்பணத்தை ஆன்லைனில் நேரடியாக அனுப்பினர்.
இணைய வங்கித்துறையின் வசதியை திறமையாக பயன்படுத்திய இந்த புதுமை திருமண நடைமுறை குறித்து சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பையும் கலந்த வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on InstagramA post shared by INDIA ON FEED (@indiaonfeed)