 
             
 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தெற்குகாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து (30) பாஜ ஊடக பிரிவு ஐடிவிங் ஒன்றிய தலைவராக உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தமிழக அரசையும் காவல்துறையையும் குறைத்து அவதூறாக பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுக நகர ஐடிவிங் பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன் புகார் அளித்ததைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மாரிமுத்துவை விடுவிக்க கோரி பாஜ சார்பில் ஒன்றிய தலைவர் முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் 12 பேரை கைது செய்தனர். பின்னர், அவர்கள் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!