 
             
 
கோவை அருகே அன்னூரில், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்ட கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவனையும் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அம்பலமாகி அதிர வைத்திருக்கிறது.
அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் (38) என்பவர் பைனான்சியர். இவரின் மனைவி ஜாய் மெட்டில்டா (27). இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளான். லோகேந்திரனின் தாய் வழிப் பாட்டி மயிலாத்தாள் (60) அவர்களுடன் வசித்து வந்தார்.
ஜாய் மெட்டில்டா பணியாற்றிய நிதி நிறுவனத்தின் கிளை மேலாளரான நாகேஷ் (25) என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்துள்ளனர். இதை அறிந்த போது இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் லோகேந்திரன் வெளியூருக்கு சென்றிருந்த நாளில் நாகேஷ், ஜாய் மெட்டில்டாவின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை மயிலாத்தாள் கண்டு அதிர்ச்சியடைந்து இது குறித்து உறவினர்களுக்கு தெரிவிக்க முயன்ற போது, இருவரும் சேர்ந்து மயிலாத்தாளை தலையணையால் அமுக்கி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் மயிலாத்தாள் மாரடைப்பால் இறந்ததாக நடித்து, அவரது உடலை உறவினர்களுடன் சேர்ந்து அழுதப்படியே நாடகமாடி சடங்குகள் செய்து புதைத்தனர். பின்னர் தனது கணவரையும் இதே போல கொன்று விட்டு சொத்துகளை விற்று நாகேஷை மறுமணம் செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

சமீபத்தில் ஜாய் மெட்டில்டா மற்றும் நாகேஷ் இணைந்து லோகேந்திரனை கொல்ல முயன்ற போது அவர் தப்பியதால், போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
மயிலாத்தாளின் மரணம் குறித்து மீண்டும் விசாரணை மேற்கொண்ட போலீசார், தற்போது அவரது உடலை தோண்டி எடுத்து புறநோக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?