தயார் நிலையில் 'பாகுபலி' ராக்கெட்... நாளை கவுண்ட்டவுன் தொடக்கம்!
Dinamaalai October 31, 2025 04:48 PM

’பாகுபலி’ ராக்கெட் நவம்பர் 2ம் தேதி ஏவப்பட உள்ள நிலையில், நாளை கவுண்டவுன் தொடங்குகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகிய ‘ஜி-சாட்–7ஆர்’ (சி.எம்.எஸ்–03) ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நாளை மறுதினம் நவம்பர் 2ம் தேதி ‘எல்.வி.எம் 3’ எனப்படும் ‘பாகுபலி’ ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. சுமார் 4,400 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள் இந்திய ராணுவத்திற்கான முன்னேற்றமான தகவல் தொடர்பு வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோவின் தகவல்படி, ராக்கெட் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்டு, செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கான முன்னோட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ஏவுதளத்துக்கு முந்தைய கட்டமாக, கடந்த 26-ந்தேதி ராக்கெட் ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டது.

இதற்கான இறுதி கட்ட ‘கவுண்ட்டவுன்’ நாளை தொடங்கும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், இந்திய ராணுவத்தின் விண்வெளி தகவல் தொடர்பு திறன் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.