நடுவானில் பறந்த விமானம்… முதியவருக்கு உணவளித்த விமான ஊழியர்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
SeithiSolai Tamil November 02, 2025 11:48 PM

சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த இதமான தருணம் தற்போது இணையத்தில் பலரின் இதயத்தையும் தொட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது ஒரு ஏர்ஹோஸ்டஸ், முதிய பயணிக்கு தனது கைகளால் மெதுவாக உணவளிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவர் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும் அந்த முதியவரை கவனித்துக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

 

இந்த வீடியோவை Saudia Aviation நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “சவூதி மரபு மதிப்புகளின் உண்மையான பிரதிபலிப்பு இது. ஒரு ஏர்ஹோஸ்டஸ், முழுப் பயணத்தின் போதும் முதிய பயணிக்கு அன்புடனும் மரியாதையுடனும் உணவளித்தார்” என்று அந்த பதிவு குறிப்பிடுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அந்த பணியாளரின் மனிதாபிமானத்தையும் பொறுமையையும் பாராட்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “இவ்வளவு மனமுள்ள பணியாளரை வேலைக்கு அமர்த்தும் சவூதி குழுமத்துக்கு நன்றி,” என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். “அந்த முதியவருக்கு பார்கின்சன்ஸ் நோய் இருப்பது போல தெரிகிறது… அவருக்கு இறைவன் நலமளிக்கட்டும்,” என மற்றொருவர் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானச் செயல் பலரையும் கவர்ந்து, “இன்னும் உலகத்தில் நன்மை உயிருடன் இருக்கிறது” எனப் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.