ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி அமைரா, சுமார் 47 அடி உயரத்தில் இருந்து கீழே குதிப்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இது தற்கொலையாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சம்பவ இடத்தில் இருந்த இரத்தத் தடயங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுவதால், மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது சந்தேகம் எழுப்பி வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடயங்களை அழிக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகம் ஈடுபட்டிருக்கலாம் என பெற்றோரும், கவுன்சிலர் ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவியின் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.