பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாஷ் கவுடா என்பவருக்குச் சொந்தமான ரெசார்ட்டில் ரகசியமாக போதை விருந்து (ரேவ் பார்ட்டி) நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அதிகாலை அந்த ரெசார்ட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, ரெசார்ட்டில் இசை முழங்க, மது மற்றும் போதைப்பொருட்களுடன் ரேவ் பார்ட்டி நடைபெற்றது தெரியவந்தது. இதில் இளம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள் பலரும் போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.சோதனையின்போது கஞ்சா, ஊசிகள் உள்ளிட்ட சில போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, ரெசார்ட்டில் இருந்த 3 சிறுவர்கள், 35 பெண்கள் உட்பட 115 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான அனைவரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் பெங்களூருவிலிருந்து கக்கலிபுரா ரெசார்ட்டுக்கு வந்து, இரவு முழுவதும் விருந்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பின்னர், கைது செய்யப்பட்ட 115 பேரும் ராமநகர அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சீனிவாஸ் கவுடா தெரிவித்ததாவது: “ரெசார்ட்டில் நடந்த ரேவ் பார்ட்டியில் இளம்பெண்கள் உள்பட 115 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் பயன்படுத்தியார்களா என்பது மருத்துவ பரிசோதனையின்போது தெரியவரும். ரெசார்ட்டிலிருந்து கஞ்சா மற்றும் ஊசிகள் மீட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!