மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.இன்று நடக்கும் இறுதிப் போட்டியில், தங்களது முதலாவது உலகக் கோப்பைக்காக இந்தியா-தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளின் வீராங்கனைகள் பட்டியல்:
இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், ரேணுகா சிங் தாக்கூர், தீப்தி சர்மா, சினே ராணா, கிராந்தி கவுட், ஸ்ரீ சரணி, ராதா யாதவ், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, உமா செட்ரி, ஷஃபாலி வர்மா.
தென் ஆப்பிரிக்கா அணி: லாரா வோல்வார்ட் (கேட்ச்), அயபோங்கா காக்கா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மரிசான் கேப், டாஸ்மின் பிரிட்ஸ், சினாலோ ஜஃப்டா, நோன்குலுலெகோ மலாபா, அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மசபடா கிளாஸ், சுனே லூஸ், கரபோ மெசோ, துமி செகுகுனே, நோண்டுமிசோ ஷங்கசே
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 298 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வால்வார்ட் நங்கூரம் போல நிலைத்து நின்று அதிரடி காட்டினர். மறுமுனையில் உள்ள வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால், இந்திய அணியின் கை ஆட்டத்தில் ஓங்கியது. நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் லாரா வால்வார்ட் 101 ரன்களில் அவுட் ஆனார். இதனால், ஆட்டம் முழுவதும் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.