அடுத்த ஐபிஎல் (IPL) சீசனுக்கான தயாரிப்புகள் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் மீண்டும் களமிறங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐபிஎல் 18-வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில், 2026 சீசனுக்கான அணிகள் வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பல அணிகள் தங்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றும் முயற்சியில் உள்ளன.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ரிஷப் பண்ட் தலைமையில் கடந்த சீசனில் 7வது இடத்தில் முடித்தது. இதையடுத்து, அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தற்போதைய தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரை நீக்கி, புதிய பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், லக்னோ அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டுடன் யுவராஜ் சிங் ஐபிஎல் மற்றும் அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றிருந்தார். தற்போது பயிற்சியாளராக அவர் மீண்டும் ஐபிஎல் தளத்தில் கம்பேக் செய்யப் போவதாக வரும் தகவல், அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வட்டாரங்களில் “யுவராஜ் சிங் பயிற்சியாளராக வந்தால், இளம் வீரர்களுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும்” என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?