வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வடகிழக்கு பருவமழை காலத்தின் 3வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டி வடக்கு அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடக்கு அந்தமான் கடலில் நிலவிய மேலடுக்கு காற்று சுழற்சி வலுப்பெற்றது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் மியான்மர்- வங்கதேச கடற்கரை பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.