தமிழில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் துருவ் விக்ரம் (Dhuruv Vikram). இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம்தான் பைசன் (Bison). கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) நடித்திருந்தார். இந்த படமானது திருநெல்வேலியை சேர்ந்த மணத்தி கணேசனின் கபடி மற்றும் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக வெளியாகியிருந்தது. மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் வெளியான இப்படம், சமூக பிரச்சனைகள் தொடர்பான கதைக்களமும் இணைந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் பசுபதி (Pasupathi), ரஜீஷா விஜயன், லால் மற்றும் அமீர் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே கலவையான விமர்சங்களையே பெற்றுவருகிறது.
தற்போது வரையிலும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் துருவ் விக்ரம் கதாபாத்திரத்தை விடவும், அனுபமாவின் வயது மூத்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த வேறுபாட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்து மாரி செல்வராஜ் ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி – வெளியானது அறிமுக வீடியோ
அந்த நேர்காணலில் தொகுப்பாளர், பைசனில் நடிகர்களின் வயது வித்தியாசம் தொடர்பான கேள்வியை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “இப்போது சமூகத்தில் ஒரு பெண், ஒரு ஆணை விடவும் பெரியவளாக தெரியவேண்டும் என்றால் நமது நினைவிற்கு வருவது வயது மூத்தவள் என்பதுதான். வயது மூத்தவள் என்றால் அவள் பெரியவளாக தெரிவாள், இல்லையெனில் எந்த விதத்திலும் அவள் பெரியவளாக தெரியமாட்டாள். இப்பொது ஒரு காட்சியில் ஒரு ஆணையும், பெண்ணையும் ஒன்றாக காட்டும்போது, அந்த இடத்தில அந்த ஆண்தான் பெரியவனாக தெரிவான்.
இதையும் படிங்க: கிராமத்து பெண்ணாக ஜான்வி கபூர்.. ‘பெடி’ படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது!
ஒருவேளை அந்த ஆணை விடவும், அந்த பெண் 2 வயது மூத்தவளாக இருந்தால், அவள்தான் அந்த இடத்தில் பெரியவளாக தெரிவாள். அந்த விதத்தில் ஒரு பெண் உயர்ந்தவளாக இருந்தால் இந்த சமூகம் எப்படி சிந்திக்கும், நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஆண் தன்னுடைய வயது மூத்த பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டும் என்றாலே இந்த சமூகம் எப்படி இருக்கும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதன் காரணமாகத்தான் பைசன் படத்தில் அதை வைத்தேன்” என அவர் அதில் தெளிவாக கூறியிருந்தார்.
பைசன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :His name has been cheered arcoss all spheres!! Thankful beyond words!! #BisonKaalamaadan 💥🦬#Blockbuster Raid in the Theatres Near You! 💥💥💥@applausesocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @beemji @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi… pic.twitter.com/COfFOSkgFV
— Mari Selvaraj (@mari_selvaraj)
இந்த பைசன் திரைப்படமானது வெளியாக இத்துடன் 2 வாரங்கள் நிறைவடைந்துள்ளது. இருந்தாலும் மற்ற படங்களுடன் திரையரங்குகளில் வெளியாகித்தான் வருகிறது. இப்படத்திற்கு பல்வேறு பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.