புனேவில் அதிகாலை நேரத்தில் பண்ட் கார்டன் மெட்ரோ ரெயில் நிலைய தூணில் ஒரு கார் நிலைதடுமாறி மோதியது. இதில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரில் இருந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அந்த பகுதியில் உள்ளவர்கள், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 2 பேர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டது.
ஆஸ்பத்திரியில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.