கந்த சஷ்டி விரதம் 5ம் நாள் சிறப்புகள் வழிபாட்டு நேரம் முறை!
Dinamaalai November 03, 2025 10:48 PM

கந்தசஷ்டி விரதம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த விரதத்தின் ஐந்தாம் நாள் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. சூரனை வதம் செய்வதற்காக முருகப் பெருமான் அன்னை பராசக்தியிடமிருந்து சக்தி வேல் பெற்ற நாள் என்பதால், இந்த நாள் “வெற்றியின் நாள்” எனப் போற்றப்படுகிறது. சொந்த வீடு கனவு நிறைவேறவும், நிம்மதியான வாழ்க்கை அமையவும் விரும்புவோர் இந்த நாளில் முருகனை வழிபடுவது சிறப்பாகும்.

சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நாளில் முருகப் பெருமான் சக்தி வேல் பெறும் தருணத்தில், அவரின் திருமேனியில் வியர்வை மலரும் அதிசயம் நிகழும் என நம்பப்படுகிறது. சிவபெருமான் தன் சக்தியையும், பராசக்தி தன் ஆற்றலையும் சேர்த்து வழங்கிய அந்த வேல் “வெற்றி வேல்” ஆகி, சூரனை வென்று தேவர்களை காப்பாற்றியது. எனவே, இந்த நாளில் வேல் வழிபாடு செய்வது அனைத்து தடைகள், பகைகள் விலகி வெற்றி கிடைக்கச் செய்யும் என கூறப்படுகிறது.

ஐந்தாம் நாள் காலை 10 முதல் 11 மணி வரை, மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு சிறந்தது. முருகனுக்கு தேன், திணை மாவு, பழங்கள் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து, அதையே தானமாக வழங்குவது புண்ணியம். வீட்டில் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்; இல்லையெனில் முருகனின் படத்தில் உள்ள வேலுக்கு சந்தனம், குங்குமம் தொட்டு வேல் மாறல், வேல் விருத்தம் போன்ற துதிகளைச் சொல்லலாம். வேல் வழிபாடு முருகனை நேரடியாக வழிபட்டதற்கு சமமானது; அவர் அருளால் வீடு, வாழ்க்கை, வெற்றி அனைத்தும் நிறைவுறும் என நம்பப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.