சின்னத்திரை சினிமாவில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் முக்கிய நடிகராக இருந்துவருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் போன்றவற்றில் பணியாற்றியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது சினிமாவில் கதாநாயகனாக படங்ககளில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சிறப்பான நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஆண் பாவம் பொல்லாதது (Aan paavam pollathathu). இந்த படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மாளவிகா மனோஜ் (Malavika Manoj) நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 அக்டோபர் 31ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் கலையரசன் தங்கவேல் (Kalaiyarasan Thangavel) இயக்கியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாஸிடிவ் விமர்சனங்கள் எழுந்துவருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களை சந்திப்பதற்காக கோவில்பட்டியில் உள்ள தனியார் திரையரங்கத்திற்கு, ஆண்பாவம் பொல்லாதது படக்குழு சென்றிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரியோ ராஜ், கரூர் சோகம் குறித்து அஜித் குமார் (Ajith Kumar) சொன்ன கருது சரிதான் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ‘தாதாசாகேப் பால்கே விருது’ வென்ற அல்லு அர்ஜுன் மற்றும் சாய் பல்லவி.. குவியும் வாழ்த்துக்கள்!
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரியோ ராஜூடம் அஜித் குமாரின் கருது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில் அவர், ” அஜித் சார் சொன்னது சரிதான். சினிமா என்பது ஒரு கொண்டாட்டம், அந்த கொண்டாட்டம் கொஞ்சம் தடம் மாறும்போது அது கலவரமாக மாறிவிடுகிறது. ஒரு திரையரங்கில் அனைவரும் இணைந்து கொண்டாடிவிட்டு, மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அப்போதுதான் அடுத்தகட்ட பார்வையலாளர்கள் வருவார்கள், சினிமாவை கொண்டாடவேண்டும் என்றுதான் அஜித் சாரும் சொன்னாரு, நாங்களும் அதைத்தான் பின்பற்றுகிறோம்” என அதில் பேசியிருந்தார்.
இதையும் படிங்க : 129 அறுவை சிகிச்சைகள்… சினிமா நடிகன் என்பதால் என நினைக்கிறார்கள் – அஜித் குமார் ஓபன் டாக்
மேலும் பேசிய ரியோ ராஜ், தனது திரைப்படங்களை பார்க்கவந்த பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படத்திற்காக ஒரு திரையரங்கம் முழுவதும் ஹவுஸ் ஃபுல்லாக இருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மக்கள் அனைவரும் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு வந்து பார்க்கவேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
ஆண் பாவம் பொல்லாதது படம் குறித்து ரியோ ராஜ் வெளியிட்ட பதிவு :Here’s the Sneak Peek of #AanPaavamPollathathu
▶️ – https://t.co/NEYHPe5qR0
Watch the Sneak Peek on Moviebuff Tamil YouTube channel!#APP @rio_raj @imalavikamanoj @DrumsticksProd @agscinemas @blacksheepoffl @kalaiyinkural @RjVigneshkanth @ertviji @archanakalpathi pic.twitter.com/rb47NUpWLR
— Rio raj (@rio_raj)
இந்த ஆண்பாவம் பொல்லாதது படமானது, திருமணமான ஆண்களின் வாழ்க்கையை பற்றியும், கணவன் மனைவியின் வாழ்க்கை பற்றியுமான மாறுபட்ட கதையில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு மக்களிடையே சிறப்பான வரவேற்புகள் இருந்துவருகிறது எனது குறிப்பிடத்தக்கது.