
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு தற்போது வினாடிக்கு 800 கனஅடி அளவில் நீர் வந்துகொண்டிருக்கிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 21) மாலை 4 மணிமுதல் வினாடிக்கு 100 கனஅடி அளவில் முதல்கட்டமாக உபரி நீர் திறக்கப்படவுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏரியின் நீர் அளவு 21 அடியை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஏரியை ஒட்டியுள்ள கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!