24 வருடங்களுக்குப் பின் திருத்தம்... தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி!
Dinamaalai November 03, 2025 03:48 PM

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்குகிறது.  இந்த தீவிர திருத்தப் பணி, கடந்த 2002ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவுள்ளது. அந்தப் பட்டியல் தற்போது தமிழகத் தேர்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டம், சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் பாக எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளிட்டால், வாக்காளர் பெயர், வயது, பாலினம், உறவுமுறை, அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களைப் பார்க்கலாம்.

இந்தப் பட்டியலில் பெயர் இருந்தும் தற்போது உயிருடன் இருப்பவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் உறுதிப் படிவத்தை நிரப்பி அளித்தால் போதுமானது. ஆனால் 2001ம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் மட்டுமே தங்களுடைய பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான தேவையான ஆவணங்கள் பற்றிய வழிகாட்டுதலையும் தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. குறிப்பாக பிறந்த ஆண்டு அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் கடைசியாக வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி 2001 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் 2002 ஆம் ஆண்டு ஜனவரியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்தகைய தீவிர திருத்தப் பணி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.