கருஞ்சீரகத்தை கொண்டு நம் முடியை எப்படி கருப்பாக்கலாம் தெரியுமா ?
Top Tamil News November 04, 2025 11:48 AM

பொதுவாக  நரை முடிக்கு இந்த டிஜிட்டல் யுகத்தில் நிறைய ஹேர் டை வந்து விட்டது .ஆனால் அவையெல்லாம் எதிர்காலத்தில் நிறைய பக்க விளைவுகளை கொடுக்கும் .ஆனால் நம் கிச்செனில் உள்ள கருஞ்சீரகத்தை கொண்டு எளிய முறையில் எப்படி ஹேர் டை தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.கருஞ்சீரகத்தில் இருந்து ஹேர் டை செய்ய, முதலில் ஒரு கடாயை அடுப்பில்  வைக்கவும்.
2. அடுத்து இந்த கடாயில் கருஞ்சீரக விதைகளை போட்டு நன்றாக வறுத்து எடுக்கவும்  
3.அடுத்து இந்த விதைகளை வறுத்த பின் ,நெய் கொஞ்சம் சேர்த்து லேசாக கிளறி எடுக்கவும் . 
4.அடுத்து கருஞ்சீரகம் வெந்ததும் அதனுடன் மருதாணி, காபித் தூள், வேப்பிலைத் தூள், நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலந்து அரை கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். 
5.தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்த்து நல்லா கிளறி விடவும் . 
6.அடுத்து மேற்கூரிய இந்த கலவையை சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் கொதிக்கவிட்ட பிறகு, 
7.அதை கொதிக்கவிட்ட பிறகு,கேஸை அணைத்து, குளிர்விக்க வைக்கவும். இப்போது இந்த ஹேர் டையை கூந்தலில் தடவலாம்.
8.கருஞ்சீரகத்தால் செய்யப்பட்ட இந்த ஹேர் டையை கூந்தலில் தடவ, முதலில் இந்த ஹேர் பேக்கை வேர் முதல் நுனி வரை பிரஷ் மூலம் தலையில் தடவி உலர வைக்கவும் . 
9.இதற்குப் பிறகு, இந்த ஹேர் டையை தலைமுடியில் கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலசவும். அடுத்து நம் நரை முடியில் கருமை தெரிய ஆரம்பிக்கும். 
10.இந்த ஹேர் டையை மாதம் ஒருமுறை முதல் இரண்டு முறை தடவ,நரை முடி கருமை நிறம் பெரும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.