உத்தரபிரதேசத்தில் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய குடும்பம் கார் விபத்தில் சிக்கி மூவர் உயிரிழந்தனர்.
சித்ரகூட் மாவட்டம் கேம்ப்கா பூர்வா கிராமத்தை சேர்ந்த ராஜா பையா, ஐஞ்ச்வாரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜான்சி–மிர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் கோக் கிராமம் அருகே எதிரே வந்த அரசு பஸ் காரை நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் சிதிலமாகி, பயணித்த மோகித் (14), அவரது தம்பி சுபாஷ் (6), உறவினர் ரோகித் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் ராஜா பையாவும் சிலர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?