உலகக் கோப்பையை வெல்லக் காரணமான இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு உத்தரப் பிரதேச காவல் துறையில் DSP (துணை கண்காணிப்பாளர்) பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, கோப்பையை வெல்வதில் தீப்தி ஷர்மா முக்கியப் பங்காற்றினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், தொடர் நாயகி விருதையும் தட்டிச் சென்றார்.
ஒட்டுமொத்தமாக 2025 உலகக் கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்குப் பெரும் பலமாகத் திகழ்ந்தார். விளையாட்டிலும், பொதுச் சேவையிலும் அவரது அர்ப்பணிப்பு நாட்டிற்கே பெருமை!