சென்னை அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள ஒரு துணிக்கடையில் முகமது இலாகி என்பவர் வேலை பார்த்து வந்தார். கடை அருகே செயல்படும் அசைவ உணவகத்தில் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள், கடையின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஆடை அலங்கார பொம்மை மற்றும் துணிகளில் கைகளை துடைப்பது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இரண்டு கடைக்காரர்களுக்கும் முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்றிரவு துணிக்கடை மற்றும் உணவக ஊழியர்களுக்கிடையில் கடும் மோதல் வெடித்தது. வாய்த்தகராறு ஆபாச வார்த்தைகளில் மாறி, பின்னர் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. நடுரோட்டிலேயே விரட்டிச்சென்று தாக்கியதால், துணிக்கடை ஊழியர்களில் சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் சி.சி.டி.வி. காட்சிகளுடன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், உணவக வாடிக்கையாளர்கள் அடிக்கடி கடையின் முன்பகுதியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. தற்போது காயம் அடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!