செயற்கை நுண்ணறிவு தளங்களின் அதிகரிக்கும் போட்டி மத்தியில், ஓபன் ஏஐ நிறுவனம் இந்திய பயனர்களுக்கு முக்கிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மேம்பட்ட ஏஐ சேவையான ‘சாட்ஜிபிடி கோ’ இன்று முதல் முழு ஒரு ஆண்டுக்காலம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம், இதுவரை மாதம் ரூ.399 கட்டணத்தில் கிடைத்த இந்த சேவையை, இந்தியாவில் உள்ள பயனர்கள் கட்டணமின்றி பயன்படுத்த முடியும். இலவச சாட்ஜிபிடி பதிப்பை விட ‘சாட்ஜிபிடி கோ’வில் தரவு சுருக்கம், படங்கள், வரைவுகள், விரைவான பதில்கள் உள்ளிட்ட வசதிகள் வேகமாக கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐ துறையில் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, எக்ஸ் தளத்தின் குரோக், பிரெப்ளெக்சிட்டி போன்றவை கடுமையான போட்டியில் உள்ள நிலையில், இந்த சலுகை இந்திய பயனர்களை அதிக அளவில் ஈர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

பெங்களூரில் நடைபெறவுள்ள ஓபன் ஏஐ சிறப்பு நிகழ்வை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சேவைகளுக்கு அணுகலை பொதுமக்களுக்கு எளிதாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இந்திய தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?