தலைவர் ஜி.கே.வாசன், தி.மு.க.வின் ஆளுமை குறித்த தனது கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். “தி.மு.க.வின் அதிகார அச்சுறுத்தலுக்குப் பணிந்து, வாக்காளர் சிறப்புத் திருத்தத்தைப் பற்றிப் பேசுவதற்குக் கட்சிகள் அஞ்சுகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வாக்காளர்களே தயங்குவதாகத் தெரிகிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதே அச்சத்தினால் கட்சிகள் பங்கேற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஜி.கே.வாசன், தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் மீதும் கேள்விகளை எழுப்பினார். தேர்தல் நடத்தை விதிகளைச் சரியாகப் பின்பற்றி, நேர்மையான தேர்தலை நடத்த ஆணையம் வழங்கும் அறிவிப்புகளுக்கும், செயல்பாடுகளுக்கும் தி.மு.க. அஞ்சுகிறதா என்ற சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார். “முறைப்படி தேர்தல் நடத்த வேண்டிய விதிமுறைகளை வழங்கி, தேர்தல் ஆணையம் அளிக்கும் ஆணைகளைத் தோல்வி பயத்தால் தி.மு.க. எதிர்க்கிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.