பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 30 நாட்களை நிறைவடைந்த நிலையில் சீசனில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி குழுவும் தொடர்ந்து பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. புதுசு புதுசாக பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இந்த வாரம் பிக்பாஸில் வைல்கார்ட் எண்ட்ரியாக 4 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த போது பல மாற்றங்கள் நடந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளியே உள்ள ம்க்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் நிகழ்ச்சி எப்படி மக்களிடையே பிரபதிபலிக்கிறது என்பது குறித்தும் வெளிப்படையாக பேசினர். இதன் காரணமாகவே முதல் வாரம் பிக்பாஸ் நாமினேஷன் மற்றும் போட்டியாளர்களிடையே சலசலப்பு வேறு விதமாக மாறியது. முதல் நாள் வைல்கார்ட் போட்டியாளர்களைப் பார்த்து அமைதியாக இருந்த மற்ற போட்டியாளர்கள் அடுத்த நாளே அவர்களின் ஆட்டத்தை மீண்டும் தொடங்கினர்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள கம்ருதின், பிரவீன் மற்றும் பிரஜின் இடையே கைகலப்பு ஏற்படுவது போன்ற வீடியோ வெளியாகி இருந்தது. ஆனால் அது ஒரு ப்ராங் வீடியோ என்பது 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இருது ரசிகர்கள் வெட்டி போட்டுள்ளனர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் ஹோட்டல் என்ற டாஸ்க் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த சீசனிலும் அந்த டாஸ்க் தொடங்கியுள்ளது.
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்:அதன்படி ஒவ்வொரு சீசனிலும் வீட்டில் உள்ளவர்களே பணியாளர்கள், விருந்தினர்கள் என மாறி மாறி விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்துப் போட்டியாளர்களும் பணியாளர்களாக உள்ள நிலையில் முந்தைய சீசன்களில் பங்கேற்ற அதாவது 5-வது சீசனில் பங்கேற்ற பிரியங்கா, 8-வது சீசனில் பங்கேற்ற தீபக் மற்றும் மஞ்சரி ஆகியோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
Also Read… ஜேசன் சஞ்சய் முதலில் இயக்க ஆசைப்பட்டது அந்த பிரபல நடிகர்தான் – வைரலாகும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:#Day30 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/DzFBt5Q0Z3
— Vijay Television (@vijaytelevision)
Also Read… இது கனா 2 படத்திற்கான நேரம்… இணையத்தில் கவனம் பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு