கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த நடிகர் விருது மம்முட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மம்முட்டி பெறவுள்ள 7-வது மாநில விருதாகும். பிரம்மயுகம் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1984, 1989, 1993, 2004 மற்றும் 2009,2023 ம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை வென்றுள்ளார். 2023 ம் ஆண்டு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படத்திற்காக மம்முட்டி சிறந்த நடிகருக்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அஹிம்சா என்கிறப் படத்திற்காக தனது முதல் விருதை வென்றார் மம்முட்டி. தனது முதல் விருதை வென்ற 41 ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஏழாவது விருதை இன்று வென்றுள்ளார். ‘பெமினிச்சி பாத்திமா’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருது ஷம்லா ஹம்சாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் ‘பிரம்மயுகம்’ என்கிற திரைப்படம் வெளியானது 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் நடக்கும் விதமான கதை அம்சத்துடன் ஒரு ஹாரர் திரில்லர் படமாக கருப்பு வெள்ளையில் இது உருவாகி இருந்தது. இந்த படத்தில் மம்முட்டி 80 வயதான ஒரு மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கி இருந்தார். இங்கிலாந்தில் உள்ள ஒரு கலை பண்பாட்டுக் பல்கலைகழகம் ஒன்றில் திரைப்பட பயிற்சி பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 'பிரம்மயுகம்' படம் ஒரு பாடமாக திரையிட்டு காட்டப்படுகிறது.