தெலுங்கானாவில் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 10 மாத குழந்தை ஹன்சிகா ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் நிலம் வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராமபிரம்மன் என்ற நபர், தன்னுடைய பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முயன்றும், யாரும் வாங்க முன்வராததால், புதுமையான முறையில் விற்பனை செய்ய முடிவு செய்தார். ரூ.500 மதிப்புள்ள பரிசு கூப்பன்களை அச்சிட்டு, அதனை லாட்டரி முறையில் விற்பனை செய்யத் தொடங்கினார். அந்த கூப்பன்களில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து வீட்டை வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த யோசனைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆயிரக்கணக்கானோர் கூப்பன்களை வாங்கினர். ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சங்கர், தனது பெயர், மனைவி, 10 மாத குழந்தை ஹன்சிகா மற்றும் மகள் சாய்ரிஷிகா ஆகியோரின் பெயர்களில் தலா நான்கு கூப்பன்களை வாங்கினார்.
அதன்படி, நடைபெற்ற குலுக்கலில் சங்கரின் 10 மாத குழந்தை ஹன்சிகாவின் பெயர் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடும் நிலமும் ஹன்சிகாவுக்கு பரிசாக கிடைத்துள்ளது.

இந்தச் செய்தி பரவியதும், அந்தக் குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். அப்பகுதி மக்கள் குழந்தை ஹன்சிகாவை “அதிர்ஷ்டக் குழந்தை” எனக் கொண்டாடி வாழ்த்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?