தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அட்டவணை அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வு மைய ஒதுக்கீடு மற்றும் சில நிர்வாகச் சிக்கல்களால் தயாரிப்பு பணிகள் தாமதமானதால், தேர்வு தேதிகள் இன்று (நவம்பர் 4) அறிவிக்கப்படவுள்ளன.
இந்த கல்வியாண்டில் 11ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முறை நீக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும்.

தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கான நேர அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள்களை வழங்கி, சிறப்பு பயிற்சி வகுப்புகளை தொடங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாணவர்கள் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை இணையதளம் மற்றும் தங்கள் பள்ளிகள் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?