மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மெஹவ் நோக்கி சென்ற தனியார் பேருந்து நேற்று இரவு சிம்ரோல் நகருக்கு அருகே பெரு ஹட் மலைப்பாங்கான பகுதியில் பயணித்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புப்படை வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு இந்தூரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் தெரிவித்த தகவல்படி, மூவரின் நிலைமை ஆபத்தாக உள்ளது.

விபத்து குறித்து மாநில அரசு விசாரணை உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்தியபிரதேச முதல்வர் மோகன் அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!