நேபாளத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள 6,920 மீட்டர் உயரமுடைய யாலுங் ரி மலைச்சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சர்வதேச மலையேற்ற வீரர்கள் குழு, திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய தீவிர விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த நாட்களாக தொடர்ந்து நடந்த தேடுதல் நடவடிக்கைகளில், பனிப்பாறைகளுக்குள் சிக்கியிருந்த 9 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் நேபாளத்தை சேர்ந்த வழிகாட்டிகள் உட்பட, இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் இருந்தனர். முதலில் மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளிவந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அணியினர் மொத்தம் 7 பேரின் உடல்களைச் சடலமாக மீட்டுள்ளனர். இதில் நேபாளத்தை சேர்ந்த 2 பேர், இத்தாலி நாட்டை சேர்ந்த 2 பேர், மேலும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டை சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.
மேலும் 5க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடந்த 28ம் தேதி பன்பாரி மலைச்சிகரத்தில் மாயமான இத்தாலிய 3 மலையேற்ற வீரர்களில் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற இருவர் மலைக்குடிசைக்குள் இருந்தபடியே பனிச்சரிவால் புதைந்ததற்கான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களின் உடல்களும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
நேபாள மலைப் பகுதி தொடர்ந்த வானிலை மாற்றங்களால் ஆபத்தானதாக மாறியுள்ள நிலையில், இந்த சம்பவம் உலக மலையேற்ற சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க