ஜின்ஜியாங் மாகாணத்தில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Dinamaalai November 06, 2025 03:48 PM

 

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இதன் அதிர்வு 4.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி தரைமட்டத்தில் இருந்து சுமார் 220 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதிர்வு குறைந்த ஆழத்தில் ஏற்பட்டதால் பெரிய சேதம் எதுவும் நிகழவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி சீனாவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.