கடந்த சில நாட்களாக தங்க விலை மாறி மாறி குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் சற்று உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 3-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.11,350க்கும், ஒரு சவரன் ரூ.90,800க்கும் விற்பனையாகியது. அதன்பின் தொடர்ந்து இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 விலை குறைந்து, ரூ.89,440 ஆக விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்வுடன் ரூ.11,250க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களின் சரிவுக்குப் பிறகு இந்த உயர்வு வியாபாரிகள் மற்றும் நகை வியாபாரிகளுக்கு நிம்மதியளித்துள்ளது.

தங்க விலையுடன் வெள்ளி விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்வுடன் தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.164க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!