இந்தியர்களில் 9 பேரில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு - ஐசிஎம்ஆர் அறிக்கை!
Dinamaalai November 06, 2025 12:48 PM

நாட்டில் வைரஸ் தொற்று அபாயம் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது சுகாதாரத்திற்கு முக்கியமான வைரஸ் நோய்களை கண்டறிய தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ICMR-க்கு உட்பட்ட ஆய்வகங்கள் மூலம் நாடு முழுவதும் 4.5 லட்சம் நோயாளிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 பேரில் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது, இந்தியர்களில் வைரஸ் தாக்கம் இன்னும் தீவிரமடைந்து வருவதை காட்டுகிறது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி–மார்ச்) நாடு முழுவதும் வைரஸ் தொற்று விகிதம் 10.7% ஆக இருந்தது. இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) இந்த விகிதம் 11.5% ஆக உயர்ந்தது. 0.8% புள்ளி அதிகரித்துள்ள இந்த நிலை, வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் புதிய சவால்களை உருவாக்குவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்ப்ளூயன்சா, கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த கசிவு அறிகுறிகளுடன் வந்த நோயாளிகளில் டெங்கு வைரஸ் அதிகளவில் கண்டறியப்பட்டது. மஞ்சள் காமாலை நோயாளிகளில் ஹெபடைடிஸ் வைரஸ், கடுமையான வயிற்றுப்போக்கு நோயாளிகளில் நோரோ வைரஸ், மேலும் மூளை தொடர்பான காய்ச்சலில் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் முக்கிய காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது.

சுகாதார துறையின் கண்காணிப்புடன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சுகாதார முன்னெச்சரிக்கை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.