பூந்தமல்லி அருகே வயலாநல்லூரில் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்காக உணவு தயாரிக்கும் கூடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.வயலாநல்லூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான உணவுக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக தினமும் உணவுகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன.
இன்று அதிகாலை வழக்கம்போல் ஊழியர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சமையலறையில் சிலிண்டரில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. தீ மளமளவென பரவி, அங்கிருந்த மளிகைப் பொருட்கள் எரிந்து கொண்டன. திடீர் தீவிபத்தால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.
தகவல் அறிந்த ஆவடி மற்றும் பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.தீ விபத்து குறித்து வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் பெரியளவில் பொருட்கள் சேதமடைந்துள்ளன என கூறப்படுகிறது.தீ விபத்தால் கரும்புகை பரவி, சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் புகை மூட்டமாக மாறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!