உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் ஆன்லைன் வேலை என்ற பெயரில் நடந்த மோசடியில் சிக்கிய பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜான்சி மாவட்டம் பர்வா சாகர் பகுதியைச் சேர்ந்த பாவ்னா பால் (21) என்பவர், பெத்வா நதிக்கரையில் சில நாட்களுக்கு முன்பு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தியபோது, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

2023ல் திருமணம் செய்துகொண்ட பாவ்னாவுக்கு ஒரு வயது மகன் உள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து கோவிலுக்குச் செல்லுவதாக கூறி பாவ்னா வெளியேறினார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது கணவர் ஷேர் சிங், காவல்துறையில் புகார் அளித்தார்.பின்னர் சிசிடிவி காட்சிகளின் மூலம் அவர் சென்ற வழியைக் கண்டறிந்த போலீசார், இறுதியாக ஆற்றங்கரையில் அவர் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் பாவ்னா ஆன்லைனில் வேலை தேடும் போது, “வீட்டிலிருந்தே அதிக ஊதியத்துடன் பென்சில் பேக்கேஜிங் வேலை” என்ற விளம்பரத்தை நம்பி அதில் பதிவு செய்துள்ளார். வேலைக்கான பதிவு கட்டணமாக ரூ.35,000 கேட்டுள்ளனர். நம்பிய பாவ்னா அந்த தொகையை அனுப்பிய பின், தொடர்புடையவர்கள் காணாமல் போயினர். தொலைபேசி எண்ணும் செயலிழந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாவ்னா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!