மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி சாதாரண வீரர்களுடன் ஆசிய கோப்பையில் பங்கேற்பு!
Dinamaalai November 08, 2025 01:48 AM

மாற்றுத்திறனாளி வீராங்கனை ஷீத்தல் தேவி தென்கொரியாவில் நடைபெற்ற உலகப் பாரா வில்வித்தைப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று பெருமை பெற்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஜெட்டாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஸ்டேஜ் 3 ஜூனியர் பிரிவில் சாதாரண வீரர்களைக் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து வரலாற்றை படைத்துள்ளார். இவ்வாறான பெருமையைப் பெறும் நாட்டின் முதல் மாற்றுத்திறனாளி வில்வித்தை வீராங்கனை என்ற சிறப்பை ஷீத்தல் பெற்றுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியைச் சேர்ந்த ஷீத்தல், பிறவிக்குறையாக ஃபோகோமெலியா என்ற அரிய நோயால் இரு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனாலும், உறுதியுடன் கால்களால் வில்லைக் கட்டி, வாயால் நாணை இழுத்து அம்பை எய்தும் திறனை வளர்த்துக் கொண்டார். ஜம்முவிலிருந்து பாட்டியாலாவுக்குச் சென்று புகழ்பெற்ற பயிற்சியாளர் கௌரவ் சர்மா தலைமையில் பயிற்சி பெற்றார். சாதாரண வீரர்களுடன் போட்டியிடும் துருக்கி வீராங்கனை ஓஸ்னூர் கியூர் கிர்டி போலவே தானும் வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசியப் பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் கலப்பு அணிகள் பிரிவுகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற ஷீத்தல், தற்போது சாதாரண வீரர்களுடன் போட்டியிடும் ஆளுமையாக உயர்ந்துள்ளார். 18 வயதான ஷீத்தல் தேவி தனது உறுதி, தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் உடல் வரம்புகள் இருந்தாலும் வெற்றி பெற முடியுமென்பதை உலகுக்கு நிரூபித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.