Dude : Gen- Z காதல் கதையில் வெளியான 'டியூட்' படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா?
TV9 Tamil News November 10, 2025 03:48 AM

கோலிவுட் சினிமாவில் தான் நடித்த முதல் படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் ரவி மோகனின் (Ravi Mohan) கோமாளி (Comali) என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் நுழைந்திருந்தார். இதை அடுத்ததாக தனது இயக்கத்தில், வெளியான லவ் டுடே (Love Today) என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானார். இந்த படமானது இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக இவர், அவரின் நண்பரும் இயக்குநருமான அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்தும் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். அந்த வகையில் இவரின் நடிப்பில் 3வது வெளியான படம்தான் டியூட் (Dude). இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்த நிலையில் மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் பிரதீப் ரங்கநாதன் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது இந்த 2கே கிஸ்தி காதல் கதையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த விதத்தில் இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதன்படி இப்படமானது வரும் 2025 நவம்பர் 14ம் தேதியில் நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாம்.

இதையும் படிங்க : பேமிலி மேன் சீரிஸ் இயக்குநரை காதலிப்பதை உறுதிப்படுத்திய சமந்தா? வைரலாகும் பதிவு!

டியூட் திரைப்படம் குறித்து பிரதீப் ரங்ககநாதன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

Thankyou for the Hattrick 🙂 pic.twitter.com/g4iTZ2fEwk

— Pradeep Ranganathan (@pradeeponelife)

டியூட் திரைப்படத்தின் மொத்த வசூல் என்ன :

இந்த டியூட் படமானது எதிர்ப்பார்த்த திருப்பங்கள், எமோஷனல், காதல் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருந்த நிலையில், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இந்த படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் தற்போதுவரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் மிகவும் பிரம்மதமாக இருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: சார்பாட்டா 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்

மேலும் மமிதா பைஜூவின் நடிப்பும் இதுவரை, அவர் எந்த படத்திலும் பார்த்திடாத மாதிரியாக இருந்தது. அவர் எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி 4 வாரமான் நிலையில், இதுவரை மொத்தமாக சுமார் ரூ 117.16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டியூட் படத்தோடு பிரதீப் ரங்கநாதனின் 3 படங்கள் தொடர்ந்து ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.