யுவராஜ் சொன்ன ரகசியம்: அபிஷேக் சர்மாவுக்கு பேட் மீது அப்படி ஒரு பாசம்! – “அதை மட்டும் யாருக்கும் கொடுக்க மாட்டான்!”
SeithiSolai Tamil November 10, 2025 03:48 AM

இளம் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா தற்போது கிரிக்கெட்டில் அதிரடியான ஃபார்மில் உள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர் மொத்தம் 163 ரன்கள் குவித்து, தொடரின் நாயகன் விருதை வென்று இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக இருந்தார்.

அபிஷேக் சர்மாவின் இந்த வெற்றிக்கு, அவரது வழிகாட்டியான (Mentor) முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கின் பயிற்சி ஒரு முக்கிய காரணம். இந்நிலையில், யுவராஜ் சிங் அபிஷேக் சர்மா பற்றி ஒரு வேடிக்கையான மற்றும் ஆச்சரியமான ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யுவராஜ் சிங் கூறுகையில், அபிஷேக் சர்மா தனது எந்த ஒரு உடைமையிலிருந்தும் விலகி இருப்பார், ஆனால் தன்னுடைய பேட்டை மட்டும் ஒருபோதும் விட்டு விலக மாட்டான் என்றார். “நீங்கள் அவனிடம் இருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அவன் பேட்டை மட்டும் யாரும் எடுக்க முடியாது. அதை எடுத்தால் அவன் இறந்துவிடுவான், அடிபடுவான், அழுதுவிடுவான்… ஆனால் பேட்டை மட்டும் கொடுக்க மாட்டான்” என்று யுவராஜ் சிங் வேடிக்கையாகக் கூறினார்.

மேலும், ஒருவேளை அபிஷேக்கிடம் 10 பேட்கள் இருந்தாலும், அவன் ‘என்னிடம் இரண்டே இரண்டு பேட்தான் இருக்கிறது’ என்று பொய் சொல்வான் என்றும் யுவராஜ் சிங் ரகசியம் உடைத்தார். அபிஷேக் தனக்குச் சொந்தமான பல பேட்களை எடுத்துக்கொண்டுவிட்டதாகவும், ஆனால் அவன் பேட்டை மட்டும் யாருக்கும் கொடுக்க மறுப்பதாகவும் யுவராஜ் கிண்டலாகக் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம், அபிஷேக்கிற்கு அவரது பேட் வெறும் விளையாட்டுச் சாதனம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான ஒரு கருவி என்பதைக் காட்டுகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ்வும், அபிஷேக் சர்மாவின் ஆட்டத்தைப் பாராட்டியுள்ளார். அவர், அபிஷேக்கும் சுப்மன் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கி விளையாடும்போது, அது ரசிகர்கள் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், இருவரும் ஆடுகளத்தைப் புரிந்துகொண்டு, விக்கெட்டுகள் கடினமான சூழலில் கூட, ரிஸ்க் எடுக்காமல் பவர்பிளேவை முடித்து, அதன் பிறகு அதிரடியாக ஆடுவதை அவர் பாராட்டினார். இந்த இளம் ஜோடிக்கு இடையேயான புரிதலை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெகுவாகச்பாராட்டியிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.