அடிக்கடி கொட்டாவி விட்டா ,அதை தடுக்க இதை செய்யுங்க.
Top Tamil News November 10, 2025 07:48 AM

பொதுவாக நாம் சோம்பலாக இருக்கும் நேரத்திலும் ,சரியாக தூக்கமின்மை காரணத்தாலும் நமக்கு அடிக்கடி கொட்டாவி வர வாய்ப்புள்ளது ,இந்த கொட்டாவி நம்மை சுறுசுறுப்பின்மையை உண்டாக்கும் ,அதனால் இந்த கொட்டாவியை எப்படி தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 
 
1.பொதுவாக நம் உடலில் குறைவான ஆக்சிஜன் இருந்தால் கொட்டாவி அடிக்கடி வர வாய்ப்புள்ளது  
2.அதனால்  சோம்பல் காரணமாக கொட்டாவி வரும் நேரங்களில், மூன்று முறை ஆழ்ந்து மூச்சை இழுங்கள். இதனால் உடலுக்கு தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைத்து கொட்டாவி தடுக்கப்படும் .
3.பொதுவாக சிரிப்பிற்கு கொட்டாவியை தடுக்கும் ஆற்றல் உண்டு என்று கூறப்படுகிறது  
4.எனவே அடிக்கடி கொட்டாவி வரும் நேரங்களில், நகைச்சுவை வீடியோக்கள்,ஜோக்குகள் போன்றவற்றை பார்த்து கொட்டாவியை தடுக்கலாம் 
5.மேலும் கொட்டாவியை தடுக்க குறிப்பிட்ட நேர இடைவேளைகளில், சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். 
6.இந்த நடை பயிற்சி  உங்கள் சோம்பலை தடுத்து, கொட்டாவி வருவதை தடுத்து உற்சாகமாய் வைக்கும் .
7.அதனால் கொட்டாவி வரும் நேரங்களில் “ஆடம் ஆப்பிள்” எனப்படும் கழுத்தில் உள்ள ஒரு புள்ளியை மெதுவாக அழுத்தினால் அது கொட்டாவியை வராமல் செய்யும் .
8.மேலும் பொதுவாக  நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தால், கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  எனவே நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் கொட்டாவியை தடுக்கலாம் 
9.எனவே ஆழ்ந்த உறக்கம் கூட   நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க வாய்ப்புள்ளது . 
10.இதனால் உங்களுக்கு  கொட்டாவி விடுவதும் தடுக்கப்பட்டு உற்சாகமாய் வைக்கும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.