இன்று நவம்பர் 10ம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற உள்ள அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு நலதிட்ட உதவிகள் வழங்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முழுவதும் தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், கீரனூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையடுத்து, கீரனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகள், 2 மனமகிழ் மன்றங்கள், மேலும் மாத்தூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை மற்றும் மனமகிழ் மன்றம் என மொத்தம் 9 இடங்களில் இன்று திங்கட்கிழமை முழு நாளும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!