ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து.. 5 பேர் பலி!
Dinamaalai November 10, 2025 12:48 PM

ரஷியாவின் தாகெஸ்தான் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கே.ஏ-226 வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காஸ்பியன் கடல் அருகிலுள்ள அச்சிசு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. விமான உபகரண உற்பத்தி நிறுவன பணியாளர்கள் உள்பட மொத்தம் 7 பேர் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தரையிறங்கும் தருணத்தில் எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து பெரும் சத்தத்துடன் நொறுங்கியது. சம்பவ இடத்திலே 5 பேர் உடல் சிதைந்து பலியானனர். மேலும் கடுமையாக காயமடைந்த இரு பேரும் விரைவாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என மருத்துவர்கள் கூறினர்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் ரஷிய விமானப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் தேடுதல், விசாரணை பணியை மேற்கொண்டு வருகின்றனர். எந்திரக்கோளாறு அல்லது வானிலை காரணமா என்ற கோணத்தில் தொழில்நுட்ப ஆய்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரஷியாவில் விமானப் பாதுகாப்பு மீதான கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.