வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பவுனுக்கு ரூ.880 அதிகரித்து ஒரு பவுன் ரூ.91,280 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் (நவ.,08) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வை கண்டு இருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.