
ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் திடீரென வந்து 14 மீனவர்களையும் கைது செய்து, அவர்கள் சென்ற மீன்பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் 3-ஆம் தேதி 35 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர் சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!