ஜப்பானின் ஹொன்சு தீவின் இவாதே மாகாண கடற்கரை பகுதியில் நேற்று மாலை 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு கடல் பகுதியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் 5.12 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு, கடலடித் தட்டில் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்திற்குப் பின், சுனாமி அலைகள் உருவாகி கடற்கரையை நோக்கி விரைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும் அபாயம் இருப்பதால், உடனடியாக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
அரசு, அவசர அலர்ட் வெளியிட்டு கடற்கரை பகுதிகளில் உள்ளவர்களை எச்சரித்துள்ளது. ரயில் சேவைகள் மற்றும் கடலோர சாலைகளில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அருகில் அமைந்துள்ள ஒனாகவா அணு உலைக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், சுனாமி தாக்கம் எப்படி அமையும் என்பது குறித்து வானிலை மற்றும் நிலநடுக்க ஆய்வு துறை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. ஜப்பானில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் வாழும் நிலையில், இந்த அதிர்வு மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!