தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்தது. இந்த சூழலில், இன்று வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை திடீரென உயர்ந்திருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.880 உயர்ந்துள்ளது.
தங்கம் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரம் குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,300
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,410
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 90,400
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,280
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,327
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,447
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 98,616
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 99,576
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 167.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 167,000.00
Edited by Siva