ஐதராபாத்தில், தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.

இது குறித்து அறிந்த போதைப்பொருள் தடுப்பு போலீசார், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவர்கள் கஞ்சா விருந்தில் பங்கேற்று போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர்.

போலீசார் இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் மற்றும் மாணவர்களின் போதைப்பொருள் பிரச்சினைகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!